NSindian MYindian

NSindian MYindian
1Malaysia 1Indian

Sunday, January 23, 2011

இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது

இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது  என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய் வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன.
அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது.  மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும்  வெறுப்புணர்வையே அதிகரிக்கும்

Friday, January 21, 2011

Thaipusam splendor in Penang

Thaipusam splendor in Penang

Hindus gather for Thaipusam

Thaipusam, which is dedicated to the Hindu deity Lord Muruga, is celebrated on a grand scale at the Batu Caves Sri Subramaniar Swamy Temple in Selangor, the Balathan­dayuthapani Temple or Waterfall Hill Temple in Penang, the Sri Subramaniya Swamy Temple in Sungai Petani, Kedah, the Sri Subramaniar Swamy Temple in Gunung Cheroh, Ipoh, Perak and Sri Subramaniar Balatandayuthapani Temple in Lobak, Seremban, Negeri Sembilan among other places.

Thaipusam, which is the biggest festival for Hindus after Deepavali, usually falls in January or February and is observed as a day of thanksgiving and paying penance for Lord Muruga. Devotees prepare themselves for the occasion by cleansing their bodies through fasting and abstinence, and usually observe a vegetarian diet for a certain period of time.

Many devotees began paying penance since Sunday, with the carrying of the kavadi (a decorated structure bearing the image of several deities including Lord Muruga) on their shoulders and pal kodum (milk pots), especially at Batu Caves where about 100,000 devotees had thronged the temple.

Thursday, January 20, 2011

போலீஸ் காவலில் இறந்த கிருஷ்ணன் மீது இரண்டாவது சவப் பரிசோதனை

இரண்டு வாரங்களுக்குமுன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இறந்துபோன எம்.கிருஷ்ணனின் உடல் இன்று இரண்டாவது சவப் பரிசோதனைக்காக காலை மணி 10.19-க்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு (யுஎம்எம்சி) கொண்டு வரப்பட்டது.
அப்பரிசோதனை யுஎம்எம்சியின் உடல்கூறு பிரிவுத் தலைவர் டாக்டர் கே. மதிஹரன் தலைமையில் நடைபெறும்.
சவப்பரிசோதனை நடைபெறுவதை கிருஷ்ணன் குடும்பத்தாரின் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் குர்மிட் சிங் ஹல்லோனும் நேரில் காண்பார்கள். கிருஷ்ணன், 37, ஜனவரி 2-இல், போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தாமான் மிஹார்ஜா கொண்டோமினியத்தில் மேலும் நால்வருடன் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தம் கணவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படுவதை அவரின் மனைவி ரேவதி, 37, மறுக்கிறார்
ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான கிருஷ்ணன், ஜனவரி 7-இல், புக்கிட் ஜாலில் போலீஸ் நிலைய லாக்-அப்பில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.
இரண்டு நாள்களுக்கு முன்னர், உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு தீர்வின்படி போலீசும் சட்டத்துறை தலைவரும் கிருஷ்ணன்மீது இரண்டாவது சவப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அக்குடும்பத்தாரின் கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
எச்யுகேஎம் மருத்துவமனையில் நடைபெற்ற முதல் சவப் பரிசோதனையில்  குடல்புண் அழற்சியால் கிருஷ்ணன் மரணமுற்றார் என்று கூறப்பட்டது.ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அவருடைய உடலில் காயங்கள் நிறைந்திருப்பதைப் பார்த்த பின்னர் சவப்பரிசோதனை முடிவை ஏற்க மறுத்தார்கள்.