NSindian MYindian

NSindian MYindian
1Malaysia 1Indian

Friday, January 27, 2012

பெண்களின் வாழ்வை சீரழிக்க பெண்களே துணைபோவது சரியா?

பெண்கள் வாழ்வை ஆண்கள் மட்டும்தான் பாழடிக்கிறார்கள் என்று எத்தனையோ விவாதங்கள் நடைபெறுகின்றன. சில பாதகமான விடயங்களுக்கு துணைபோவது பெண்களாகவே காணப்படுகிறார்கள்.

ஒரே மாதிரியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரச்சனையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.ஆண் பெண் திருமணம் நடைபெறுவது என்பது இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு. மனிதனாக பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக படைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் தம் வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது அவர்களை மட்டுமே பாதிக்கிறது. அதனால் வேறு யாரும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். ஆனால் சில விடயங்கள் மற்றவர்களை பாதிப்புக்கு உள்ளாக்க கூடிய விடயங்கள்.

அவற்றை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. இன்னொருவருடைய வாழ்வை வீணடிக்கிற மாதிரியான செயற்பாடுகள் இன்று நமது சமூகத்தில் காணப்படுகின்றன.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு திருமணம் பேச்சு நடந்தது. பெற்றோர்கள் தம் மகளுக்கு ஏற்றவாறு பல இடங்களில் மணமகன் தேடி ஒருவாறு மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்து வைத்தனர்.

அந்த மணமகனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்பது அவரின் முகத்தில் தெரிந்தது. ஆனால் யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. மணமகளின் பெற்றோரும் தமது மகளிற்கு திருமணம் முடிந்துவிட்டது என்று சந்தோசமாக இருந்தார்கள். அவர்கள் மணமகன் வீட்டிலே தான் வாழ வேண்டும் என்பது மணமகளின் தாயாரினது கட்டளை.

திருமணம் நடந்து முன்று மாதங்கள் கடந்து விட்டது. மணமகளின் உறவினர் வீட்டிலே விசேட நிகழ்வு ஒன்றிற்கு இவர்களையும் அழைத்து இருந்தார்கள். மணமகன் செல்லவில்லை தன் மனைவியை அனுப்பிவைத்தார்.

அவர்கள் எல்லோரும் சென்று நிகழ்வை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தால் மணமகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

யாருக்குமே என்ன நடந்தது என்று புரியவில்லை. மணமகளின் பெற்றோர் உன்னுடன் சந்தோசமாக தானே இருந்தார் ஏன் தீடீரென இறந்து விட்டார் என்று கேள்விகள் எழுப்பினர்.

அப்போது தான் மணமகள் எழுதிய கடிதம் அவர்கள் கையில் கிடைத்தது. தனது மனைவியிற்கும் அவர்களது பெற்றோருக்குமாக எமுதப்பட்டிருந்த கடிதம் அது.

முதலில் நான் எல்லோரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். என் மரணத்திற்கும் என் மனைவிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் திருமணம் செய்து வாழுகின்ற தகுதி அற்றவன்.

என்னால் அவளுக்கு வாழ்வோ உங்களுக்கு ஒரு பேரக்குழந்தையோ தரும் தகுதியற்ற ஆண் நான். இந்த விடயம் என் தாயாருக்கு திருமணத்திற்கு முன்னதாகவே தெரியும்.

நான் எவ்வளவு சொல்லியும் பொருளுக்கும் வீட்டிற்கும் ஆசைப்பட்டு என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்கள். இந்த விடயம் நான் திருமணம் முடிந்து வந்த மறு நிமிடமே என் மனைவிக்கு கூறி விட்டேன்.

ஆனால் அவள் இந்த விடயம் கேள்விபட்டால் தன் பெற்றோர் மனமுடைந்து போவார்கள் என்று அதனை தனது வீட்டாரிடம் கூறாது எம் வீட்டிலே தனியாக வாழ்ந்து வந்தாள்.

ஆனால் நான் என் மீதுள்ள குற்ற உணர்ச்சியில் நான் துவண்டு போய்விட்டேன். இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரிந்தால் நான் அவமானப்பட நேரிடும் என்பதற்காகவும் என் மனைவிக்கு நல்லதோர் வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்.

என் தாயாருடைய செயலுக்கு நானும் உடந்தையாக இருந்து ஒரு பெண்ணின் வாழ்வை வீணடித்து விட்டேன் என அந்த கடிதம் நிறைவு பெற்றது.

இது மட்டுமல்ல இவ்வாறான பல சம்பவங்கள் இதே போல் நடைபெற்றுக கொண்டு தான் இருக்கிறன. அந்த சம்பவங்களின் தொகுப்பு தொடர்ந்தும் இடம்பெறும்.

இந்தப் பெண்ணின் திருமண வாழ்வு மணவறையுடன் முடிந்தது விட்டதா?
திருமணம் என்ற ஒரு சடங்கு நடைபெற்ற காரணத்தினால் இந்தப் பெண் விதவையா? நமது கலாச்சாரத்தில் இந்த கேள்விகளுக்கான விடை கிடைக்குமா?

No comments:

Post a Comment