NSindian MYindian

NSindian MYindian
1Malaysia 1Indian

Sunday, January 23, 2011

இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது

இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது  என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய் வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும்.
சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன.
அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது.  மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும்  வெறுப்புணர்வையே அதிகரிக்கும்

4 comments:

  1. இப்பாட நூலைப் படிக்கப்போகும் ஒவ்வொரு இந்திய மாணவனின் தகப்பன் யார் என்ற கேள்வியை எழுப்பும் இலக்கியப் படைப்பு இது.

    இதோ ஒன்று:
    “Maniam seperti orang India yang lain, tidak pernah khuatir tentang keselamatan isterinya”
    (பக்கம் 218).

    மற்ற இந்தியர்களைப்போல தன் மனைவியின் பாதுகாப்பைப்பற்றி மணியமும் கவலைப்பட்டதே இல்லை.

    இதன் கருத்து என்ன? உள்நோக்கம் என்ன? இது இந்தச் சொல், அந்தச் சொல் பற்றிய விவகாரம் அல்ல.

    இந்நாவலுள் சாதியம் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக, பல்வேறு கோணங்களில் தமிழர்களின் வாழ்வியலும் பண்பாட்டுக்கூறுகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குரிய சான்றாக இந்நாவலுள் குறிக்கப்பட்டுள்ள செய்திகள் கீழுள்ளவாறு தொகுக்கப்பட்டுள்ளன:

    1900-ஆம் ஆண்டிலிருந்து நாடு விடுதலைப் பெற்றது வாயிலாக மலாய்க்காரர், தமிழர், சீனர் ஆகிய மூவினத்தாரிடயே நிலவிய தொடர்பினையும் ஒற்றுமையினையும் தெளிவுறுத்தும் நோக்கத்திற்காக இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், அடிப்பட நோக்கம் அஃதன்று என்னும் உண்மையை மேற்காணும் குறிப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஓர் இனத்தாரையும் அவர்கள் சார்ந்துள்ள பண்பாட்டினையும் இழிவு செய்வதற்கு இவ்வளவு போதாதா? இதற்கு என்ன சாக்குப்போக்குச் சொல்லவிருக்கின்றனர்?

    ஒற்றுமையே நம் வாழ்வு, நம் பண்பாடு, என முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் கல்வியகங்களில் எத்தகைய சிந்தனகள் புகுத்தப்பட வேண்டுமென்னும் தெளிவற்றிருக்கின்றோம். இது வியப்பிலும் வியப்பாக இருக்கின்றது.

    ReplyDelete
  2. Novel interlok tidak sesuai untuk pelajar. kandungan novel kena dibaca dan dikupas secara terperinci semasa menjawab soalan novel. Guru-guru juga menghadapi masalah untuk mengajar dan menerangkan maksud kandungan tulisan. sebagai guru yang mengajar bahasa melayu di sekolah menengah, secara ikhlas saya berpendapat novel ini tidak sesuai. Kandungan novel akan menjadi bahan ejekan. Misalnya, watak dan perwatakan maniam.Jika kata-kata sensitif digunakan oleh pelajar, ini akan menambahkan masalah dalam kalangan pelajar. Tak cukupkah masalah disiplin di sekolah? Sebagai manusia yang boleh berfikir dengan waras , pihak kementerian pelajaran dan kerajaan BN perlu menjaga sensitiviti kaun lain sebab kita semua Melafazkan ikarar “kepercayaan kepada Tuhan. sekian

    ReplyDelete
  3. ஒரு இன‌த்தை அல்ல‌து ம‌னித‌னை இழிவு ப‌டுத்த‌வ‌து என்ப‌து எந்த‌ ம‌த‌த்திலும் ச‌ம‌ய‌த்திலும் இல்லை. ஒரு நாவ‌லின் மூல‌ம் ஒரு இன‌த்தையே அவ‌மான‌ப் ப‌டுத்துப‌வ‌ன், அத‌ற்கு அங்கிகார‌ம் த‌ருப‌வ‌ன் ம‌ற்றும் சுய‌ன‌ல‌த்திற்காக‌ க‌ண்டும் காணாம‌ல் இருப்ப‌வ‌ன் எல்லாம் நிச்ச‌ய‌ம் ம‌னித‌ உண‌ர்வ‌ற்ற‌வ‌னாய்… ம‌க‌னாய்த்தான் இருப்பான்.

    ReplyDelete
  4. அரசாங்கத்தின் அணுகுமுறை எதுவாக இருந்தாலும் அது எல்லாக் காலகட்டத்திலும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிலையான அணுகுமுறையாக அமைய வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை வலுப்படும்.

    ReplyDelete